13ஆவது உலக அமைதி மன்றக் கூட்டம் ஜூலை 2முதல் 4ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. உலக அமைதி மற்றும் செழுமை: கூட்டு பொறுப்பு, கூட்டு பகிர்வு மற்றும் கூட்டு வெற்றி என்பதென்ற தலைப்பைச் சுற்றி சீன மற்றும் வெளிநாட்டு உயர் நிலை பிரதிநிதிகளும் நிபுணர்களும் அறிஞர்களும் பரிமாற்றங்களை மேற்கொண்டு உலகின் அமைதி மற்றும் வளர்ச்சி பற்றி விவாதித்தனர்.
மன்றக் கூட்டத்தின் போது, சீன-அமெரிக்க உறவு, பொருளாதார வர்த்தகம், தெற்குலகம் முதலிய நிகழ்ச்சி நிரல்கள் பல்வேறு தரப்புகள் பெரும் கவனம் செலுத்திய அம்சமாகும். சர்வதேச சமூகம் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பில் ஊன்றி நின்று உலக நிர்வாகத்தைக் கூட்டாக மேம்படுத்தி அறைக்கூவல்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்றும், சர்வதேச விவகாரங்களில் சீனா மேலும் ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்ற வேண்டும் என்றும் அதில் பங்கேற்ற விருந்தினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.