அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப்பின் சீன பயணத் திட்டம் அறிமுகம்

சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப் மே 13 முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கடந்த அக்டோபர் புசானில் சந்திப்புக்கு பிறகு சீன- அமெரிக்க அரசு தலைவர்களின் நேரடி சந்திப்பு இது முதன்முறையாகும் என்றும், 9 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்ப் மீண்டும் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவாகும் என்றும் கூறினார். சீன-அமெரிக்க உறவு, உலக அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்பான முக்கியமான விவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் ஆழமான முறையில் கருத்துக்களை பரிமாறி கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், அரசு தலைவர்களின் தூதாண்மை, சீன-அமெரிக்க உறவில் ஈடுசெய்ய முடியாத உத்திப்பூர்வ தலைமை பங்கை வகிக்கிறது. சமத்துவம், மதிப்பு மற்றும் பரஸ்பர நன்மை தரும் கொள்கைகளை கடைப்பிடித்து, ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், கருத்து வேறுபாடுகளை கட்டுப்படுத்தவும், மாற்றங்கள் நிறைந்த உலகிற்கு மேலதிக நிலைத்தன்மையையும் உறுதியையும் வழங்கவும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author