2026 உலக டிஜிட்டல் கல்வி மாநாடு துவக்கம்

சீனாவின் ஹாங்சோ நகரில் மே 11ஆம் நாள் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு உலக டிஜிட்டல் கல்வி மாநாட்டின் தொடக்க விழாவில், சீன துணை அரசு தலைவர் ஹான் ஜெங் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், கல்வியில் செயற்கை நுண்ணறிவின் ஆழமான செல்வாக்கிற்கு அரசு தலைவர் ஷி ச்சின்பிங் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில், சீனா தேசிய கல்விக்கான டிஜிட்டல் மயமாக்க உத்தியை ஆழமாக செயல்படுத்தி, உலகெங்கிலும் உள்ள கல்வி கற்பவர்களுடன் உயர்தர டிஜிட்டல் கல்வி வளங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறது. டிஜிட்டல் கல்வியின் மாற்றம் மற்றும் புத்தாக்கத்தை கூட்டாக ஊக்குவிப்பதற்காக அனைத்து தரப்புகளுடனும் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author