வர்த்தக துறையில் டிஜிட்டல் மற்றும் பசுமை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கு கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 31ஆம் நாள் வெள்ளிக்கிழமை தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெற்ற ஏபெக் கூட்டத்தில் முன்மொழிந்தார்.
இதில், எல்லை தாண்டிய வர்த்தகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வலுவான வினையூக்கியாக பங்காற்றி, காகிதமில்லா வர்த்தகம், ஸ்மார்ட் சுங்கம் மற்றும் பிற துறைகளில் நடைமுறைக்குப் பொருத்தமான ஒத்துழைப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், பல்வேறு தடைகளை அகற்றி, பசுமைத் தொழில்கள், பசுமை எரிசக்தி மற்றும் பசுமை மாற்றத்திற்கான முக்கிய கனிமங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும்
என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. ஏபெக் அமைப்பின் கீழ் சீனாவால் ஆரம்பிக்கப்பட்ட ஆசிய-பசிபிக் முன்மாதிரி மின்-துறைமுக வலையமைப்பு, பசுமை விநியோகச் சங்கிலிக்கான ஒத்துழைப்பு வலையமைப்பு ஆகியவை, வர்த்தகத்தின் டிஜிட்டல் மற்றும் பசுமை மேம்பாட்டிற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கு முக்கியமான தளமாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                