உலக சுகாதார மாநாட்டில் பங்கெடுக்க தைவானுக்கு சீனா ஒப்புதல் இல்லை

79ஆவது உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு தைவான் இதுவரை பெறவில்லை. இது தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்கையில், சீனாவின் தைவான் பிரதேசம் சர்வதேச அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து சீனாவின் நிலைப்பாடு தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் உள்ளது என்றார். சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காத நிலையில், உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்பதற்கான எந்த ஆதாரம், காரணம் மற்றும் உரிமையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பேணிக்காக்கும் விதமும், ஐ.நா. பொது பேரவை மற்றும் உலக சுகாதார மாநாட்டின் குறிப்பிட்ட தீர்மானங்களின் முக்கியத்துவம் மற்றும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், நடப்பாண்டின் உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு ஒப்புதல் அளிக்காது என சீனா முடிவு செய்துள்ளதாகவும், ஒரே சீனா என்ற கோட்பாட்டை மீறி, அரசியல் சதிக்காக தைவானைப் பயன்படுத்தும் எந்த முயற்சியும் தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author