ஜுலை 6ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜியாங்சூ மாநிலத் தலைநகர் நான்ஜிங்கில் ஆய்வு மேற்கொண்டார். இப்பயணத்தின் போது அறிவியல் ஆய்வகம் மற்றும் தொழில் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்டு, முக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் முன்னேற்றம், மேம்பட்ட உற்பத்தித் துறையின் வளர்ச்சி மற்றும் உயர்தர வளர்ச்சி ஆகிய பணிகளை அறிந்து கொண்டார்.