ஜப்பானில் நள்ளிரவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் 2 இடங்களில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் வடக்கு பகுதியில் இவாட் மற்றும் அமோரி மாகாணத்தில் நள்ளிரவு 12.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது என இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் வீடுகள்லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் அந்த மாகாணங்களின் வடகடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை எந்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.