தைவான் பிரதேசம், ஐ.நாவில் சீனாவின் தைவான் என்று அழைக்கப்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகம் மார்ச் 10ம் நாள் மீண்டும் வலியுறுத்தியது.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் இது குறித்து கூறுகையில், ஐ.நாவும் அதன் நிறுவனங்களும், தைவான் பற்றி பேசிய போது, சீனாவின் தைவான் மாநிலம் என்று குறிப்பிடுகின்றன. தைவான் பிரதேசம், சீனாவின் ஒரு மாநிலமாக இருக்கிறது என்பதும், தனி நாடு இல்லை என்பதும், ஐ.நாவின் நிலையான நிலைப்பாடாகும் என்று தெரிவித்தார்.
உலகளவில் ஒரே சீனா மட்டுமே உள்ளது. தைவான், தனி நாடாக அல்ல. அது சீனாவின் ஒரு பகுதியாகும் என்று 1971ம் ஆண்டு ஐ.நா பேரவையின் 2758வது தீர்மானத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.