ஈரான் உடனான போரின் பின்னணியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத்தும் ‘ரகசிய சந்திப்பு’ நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்ட தகவலை அமீரக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
புதன்கிழமை அன்று நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘Operation Roaring Lion’ போர்ப் பிரச்சாரத்தின் போது, பிரதமர் நெதன்யாகு ரகசியமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்று அதிபர் ஷேக் முகமது பின் சயீத்தைச் சந்தித்தார் என்றும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு ‘வரலாற்றுச் சாதனை’ என்றும் குறிப்பிட்டிருந்தது.
இஸ்ரேல் பிரதமர் ரகசிய பயணமா? ஈரான் போருக்கு மத்தியில் வெடித்த புதிய சர்ச்சை
