மதுரையில் 24 பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை..!!

Estimated read time 0 min read

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக சுமார் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர்.

இவர்களை மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் போலீசார் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி விளக்குத்தூண் அவ்வையார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.ஏ.வி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திலகர்திடல் மீனாட்சி பெண்கள், மங்கையர்க்கரசி, வீரமாமுனிவர், சேதுபதி, மீனாட்சி பஜார் தொழிலாளர் நலத்துறை ஆகிய மேல்நிலைப்பள்ளிகள், தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள். மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் எம்.வி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, மதிச்சியம் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கீரைத்துறை செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, தெற்குவாசல் ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 24 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், மேற்கண்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த பள்ளிகள் மட்டும் அடுத்த மாதம் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author