வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 51 வயதான நபர் ஒருவர் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தனது 34 ஆண்டுகாலக் கனவை நனவாக்கியுள்ளார்.
இளமைப் பருவத்தில் பல்வேறு குடும்ப சூழல் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போனபோதிலும், அவர் தனது இலட்சியத்தைக் கைவிடாமல் நீட் தேர்வில் வெற்றி பெற்று தற்போது மருத்துவக் கல்லூரிக்குள் நுழைகிறார்.
17 வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற தீராத விருப்பம் கொண்டிருந்த அவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் அவர் இடத்தை பெற்றுள்ளார்.
நீட் தேர்வு கொடுத்த வாய்ப்பு! 51 வயதில் எம்பிபிஎஸ்! 34 வருடப் போராட்டத்திற்குப் பின் மருத்துவராகும் நெகிழ்ச்சிக் கதை
