10 நிமிடங்களுக்குள் செல்லவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்

Estimated read time 0 min read

விபத்து நேர்ந்த இடம் 10 கிலோ மீட்டருக்குள் இருந்தால், விபத்து நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் 10 நிமிடத்திற்குள் செல்ல வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விபத்து நேர்ந்த இடம் 10 கிலோ மீட்டருக்குள் இருந்தால், விபத்து நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் 10 நிமிடத்திற்குள் செல்ல வேண்டும், இலக்கை 10 நிமிடங்களுக்குள் அடையாவிட்டால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அவசர அழைப்பு வந்த ஒரு நிமிடத்திற்குள், அழைப்பை ஏற்காவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், அழைப்பு ஏற்ற 2 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் புறப்படாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு பெறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் காயமடைந்தவர்களை, மருத்துவமனையில் அனுமதிக்க தவறினால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆம்புலன்ஸில் தேவையான மருத்துவ உபகரணங்கள், தகுதியான ஓட்டுநர், மருத்துவ பணியாளர்கள் இல்லை என்றாலும், ரூ.10,000 அபராதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author