சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பக்கிங்ஹாம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னையில் ஏற்கனவே பேருந்து, ரயில், விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அடுத்தகட்டமாக நீர்வழிப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் கால்வாயை பயன்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இ-டெண்டர் கோரியுள்ளது.
சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம்: பக்கிங்ஹாம் கால்வாயில் அதிநவீன படகு போக்குவரத்து விரைவில்
