டாடா குழுமத்தின் தலைமையகமான ‘பாம்பே ஹவுஸில்’ என். சந்திரசேகரனின் முடிவைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த வாரிசு விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
இந்த போட்டியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான டிவி நரேந்திரனின் பெயர் பலமாக அடிபட்டு வருகிறது.
இருப்பினும், அடுத்த தலைவர் குறித்து டாடா சன்ஸ் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், தொழில்துறை வட்டாரங்களில் பரவி வரும் பல பெயர்களில் டிவி நரேந்திரனும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் அடுத்த தலைவராக அடிபடும் டிவி நரேந்திரன் பெயர்; யார் இவர்?
