சீனாவிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. சீனாவுடனான உறவுகளைச் சீராக்க இந்தியா நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், அண்மைக் காலங்களில் சீனத் தொடர்பு கொண்ட நிறுவனங்களுக்கான முதலீட்டுக் கட்டுப்பாடுகளைச் சில துறைகளில் தளர்த்தியுள்ளது.
