கல்வி துறையில் சீனாவின் சாதனைகள் மற்றும் முயற்சிகள்

உலக பல்கலைக்கழகத் தலைவர்கள் மன்றக் கூட்டம் ஜுலை 30ஆம் நாள் துவங்கியது. உலகளவில் மிகப்பெரிய கல்வி முறைமையை சீனா உருவாக்கியுள்ளது.

நாடளவில் பல்வேறு நிலையிலான பல்வகை பள்ளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 18 ஆயிரத்து 300 ஆகும். கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 29.3 கோடியாகும்.

மேலும், 188 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடனும், 40க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளுடனும் சீனா பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருவதாக சீனக் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் இக்கூட்டத்தில் அறிமுகம் செய்தார்.


சீனாவில் உயர்நிலை கல்வியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் கட்டுமானத்துக்காக, உயர் நிலை கல்வியின் தலைமை பங்கினையை வெளிகொணர்வது, தொழில்முறை கல்வியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, திறமைமிக்க ஆசிரியர் குழுவை உருவாக்குவது, கல்வித் துறையை எண்ணியல் மயமாக்குவது, கல்வித் துறையின் உயர்நிலை திறப்பை முன்னேற்றுவது ஆகிய 5 துறைகளில் சீனா முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author