ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்ட சீன-கொமோரோ அரசுத் தலைவர்கள்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் கொமோரோ அரசுத் தலைவர் அஷாலி ஆகிய இருவரும் 13ஆம் நாள்,  இரு நாடுகளின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். 

தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளில், சர்வதேச நிலை எப்படி மாறினாலும், இரு தரப்புறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளிடையேயான கூட்டு அரசியல் நம்பிக்கை அதிகரித்துள்ளதோடு, பல்வேறு துறைகள் சார்ந்து ஒத்துழைப்புச் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

இரு தரப்பின் வளர்ச்சியில் தான் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள ஷிச்சின்பிங், அரசுத் தலைவர் அஷாலியுடன் இணைந்து, இவ்வாய்ப்பின் மூலம், இரு தரப்புகளின் பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author