சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவு மாநாடு ஜூலை முதல் நாள் காலை 10:00 மணியளவில் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் ஜூலை ஒன்று என்ற பதக்கத்தைத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கி முக்கிய உரைநிகழ்த்தவுள்ளார்.
இம்மாநாட்டில் தேசியளவில் சிறந்த கம்யூனிஸ்ட் கட்சியினர்கள், தேசியளவில் சிறந்த கட்சிப் பணியாளர்கள் மற்றும் தேசியளவில் முன்மாதிரியான அடிமட்ட கட்சிக் குழுக்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
