புதிய யுகத்தில் மகளிர்களின் பன்முக வளர்ச்சியைச் சீனா முன்னேற்றுவதற்கான நடைமுறை மற்றும் சாதனை பற்றிய வெள்ளையறிக்கையை, சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் 19ஆம் நாள் வெளியிட்டது.
சீன மகளிர்களின் லட்சிய வளர்ச்சியை பன்முகங்களிலும் முன்னேற்றுவது, மகளிர்களின் பன்முக வளர்ச்சியை நாட்டின் செயல்பாட்டில் வைப்பது உள்ளிட்ட 5 பகுதிகள் இந்த வெள்ளையறிக்கையில் இடம்பெறுகின்றன.
சீனாவில் மகளிர்களின் வளர்ச்சி இலக்கு மற்றும் கடமை, தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 5 ஆண்டுகள் திட்டவரைவில் வைக்கப்படுவதோடு, மகளிர்களின் வளர்ச்சி நிலையை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை அளவீடுவதற்கான முக்கிய வரையறையாக கருதப்படுகிறது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.