சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆனால், ஏப்ரல் 1 தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது.
எனவே, ஹெஸ்புல்லா அமைப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளை வைத்து தாக்குதல் நடத்தாமல், ஈரானே களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்
You May Also Like
More From Author
சீன பாணியுடைய நிதித் துறை வளர்ச்சி பாதை
July 16, 2025
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.800 உயர்வு
March 10, 2026
