காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இஸ்ரேலிய படைகள் படிப்படியாக விலகிக் கொள்ளவும், காசாவில் புதிய பாலஸ்தீன நிர்வாகம் அமையவும் வழிவகை செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
காசாவில் அமைதி மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்பான ‘போர்டு ஆஃப் பீஸ்’ மூலமாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
காசா போரில் திருப்புமுனை: ஹமாஸ் அமைப்பின் முழுமையான ஆயுதக் களைவு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
