தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரியில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author