“அப்படியே அம்மாவின் அமைச்சரவை போல…’’ – நிதியமைச்சர் செங்கோட்டையன்

Estimated read time 0 min read

சென்னை செல்வதற்காக அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.

அமைச்சர் செங்கோட்டையன்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “ஜெயலலிதா இருக்கும் பொழுது முதற்கட்டமாக ஏழு பேரை தான் அமைச்சராக்கினார். அதுபோல் விஜய்யும் படிப்படியாக உயர்த்துவார். முதல்வர் நிலையில் நின்று எப்படி இயக்குவது என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எங்களை பொறுத்தவரையில் இப்போது, “நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்” அதுதான் இப்போது இருக்கும் நிலை. நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை தவெக தலைவரும், நிரந்தர முதலமைச்சருமான விஜய்க்கு உள்ளது. பொருளாதாரம் என்பது படிப்படியாக ஆய்வு செய்துதான், தெளிவான விளக்கத்தை செய்ய முடியுமே தவிர உடனடியாக கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கட்சியான அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமியால் வலுவிழந்து உள்ளது. தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார். அதனால் தான் அதிமுக இந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு திட்டமாக விஜய் செய்வார். எடுத்த உடனே 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் ஆலயங்களில் அருகே டாஸ்மாக் இருக்கக் கூடாது என்று எழுந்த கோரிக்கையின் பேரில் 700 இடங்களில் கடைகளை அகற்ற உடனடியாக அமைத்த உத்தரவிட்டுள்ளார். இதெல்லாம் பெரிய சாதனை பொறுப்பேற்ற உடனே இவ்வளவு சாதனைகள் படைத்திருக்கும் ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே இவரை தவிர வேறு யாரும் இல்லை” என்றார்.

You May Also Like

More From Author