தனி வழியில் முதல்வர் விஜய்

Estimated read time 0 min read

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வாகன அணிவகுப்பு செல்வதற்கென தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு சுமார் 17 கி.மீ. தூரம் பயணம் செய்கிறார். இதனால் வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் செய்திகள் வெளியாகின.இதனிடையே முதலமைச்சர் விஜய் போயஸ் கார்டன் அருகே வீட்டை மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வாகன அணிவகுப்பு செல்வதற்கென தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. சீராக போக்குவரத்து நடைபெறவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author