முக்கிய திட்டப்பணிகளுக்கான 3ஆவது தொகுதியான 30,000 கோடி யுவான் முதலீட்டுத் தொகையை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் ஏற்பாடு செய்தது. இதுவரை இவ்வாண்டில் இத்துறையில் மொத்தம் 80,000 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகை யாங்சி ஆற்றின் கழிமுகப்பகுதியில் உயிரின வாழ்க்கைச் சூழல் மீட்பு, யாங்சி ஆற்று நெடுகில் முக்கிய போக்குவரத்து அடிப்படை வசதிகள், மேற்கு பகுதியில் புதிய தரை-கடல் வழித்தடம், உயர் தர விளை நிலங்கள், முக்கிய நீர் வளத் திட்டப்பணிகள், நகரப் பகுதியில் நிலத்தடிக் குழாய் பாதைகள் முதலிய 1459 திட்டப்பணிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
தவிரவும், தேசிய அளவில் சரக்குப் புழக்க மையங்களின் அமைவு மேம்பாடு, திறமைசாலி பயிற்சி மற்றும் பொருளாதாரச் சமூகத்தின் தேவைக்கேற்ற அமைப்புமுறை மேம்பாடு உள்ளிட்ட ஒரு தொகுதி சீர்திருத்த மற்றும் புத்தாக்கப் பணிகளிலும் இது பயன்படுத்தப்படும்.