பயணிகள் ரயிலில் திடீரென பற்றிய தீ.. பயணிகள் அலறி அடித்து ஓட்டம்..!!

Estimated read time 1 min read

சசாரம் – பாட்னா பயணிகள் ரயில், பீஹாரின் சசாரம் ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 6 மணியளவில் சென்றடைந்தது. அப்போது, திடீரென ரயிலில் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

பின்னர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

You May Also Like

More From Author