சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் இன்று வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில், சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு 2023ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்ததை விட, 5.1விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, இவ்வாண்டின் ஜூன் மாதத்தில் இருந்ததை விட, 0.2விழுக்காடு புள்ளிகள் குறைவாகும்.
மேலும், ஜூலை மாதத்தில் சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு 2023ஆம் ஆண்டின் ஜூலையை விட, 0.5விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, இவ்வாண்டின் ஜூன் மாதத்தை விட, 0.3விழுக்காடு புள்ளிகள் அதிகரித்துள்ளது. சமூகத்தின் நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை 3லட்சத்து 77ஆயிரத்து 570கோடி யுவானை எட்டி ஜூன் மாதத்தைக் காட்டிலும், 2.7விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஜூலை மாதம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக நிலையானதாக இருந்தது. உயர் தரமான வளர்ச்சி பயனுள்ள முறையில் முன்னேற்றப்பட்டுள்ளது.