முழுமை பெறாத அமைச்சரவை – பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தாமதம் என தகவல்!

Estimated read time 0 min read

தமிழக அமைச்சரவையில் இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றி முதலமைச்சராக விஜய் மற்றும் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் உட்பட 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிக்கபட்ட நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், வனம், சுற்றுச்சூழல், வேளாண்மை உள்ளிட்ட 22 துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாததால் பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

22 துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாததால், ஆய்வு கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பட்ஜெட் தாக்கல் தேதியை தள்ளிப்போட வேண்டிய நெருக்கடி உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author