தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு..!

Estimated read time 1 min read

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆக.22ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளம் மூலம் இந்த கலந்தாய்வு நடைபெற்றது.

மீதமுள்ள காலி இடங்கள், முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றும் கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்பும் 2ம் சுற்று கலந்தாய்வு செப்.4ம் தேதி தொடங்கியது.செப்.19ம் தேதியுடன் இந்த கலந்தாய்வு முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் கூடுதல் இடங்கள் சேர்க்க இருப்பதோடு, என்ஆர்ஐ ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டிய காரணத்தால் 2ம் கட்ட கலந்தாய்வு செப்.25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கான கல்லூரிகள் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் அதன் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மொத்தம் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் என 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துடன் சேர்த்து, இதன் மூலம் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6850 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக மருத்துவப் படிப்புகளுக்கான எண்ணிக்கை 1,23,700 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், பாரத், ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ வெங்க டேஸ்வரா, ஸ்ரீனிவாசன், செயின்ட் பீட்டர்ஸ், சுவாமி விவேகானந்தா, வேல்ஸ் ஆகிய ஏழு தனியார் மருத்துவ கல்லுாரிகளில், தலா 50 இடங்கள் என, கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.பி., மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்த நிலையில், 50 இடங்கள் குறைக்கப்பட்டு உ ள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகள், கூடுதலாக, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு விண்ணப்பித்த நிலையில், அவற்றுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கவில்லை

நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 6,850 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
அடிப்படை கட்டமைப்பு இல்லாதது போன்ற காரணங்களால், 1,056 இடங்கள் குறைக்கப்பட்டு உ ள்ளன. இதன் வாயிலாக, மருத்துவ இடங்களின் எண்ணிக்கை, நாடு முழுதும் ஒரு லட்சத்து, 23,700 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில், 2,299 எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க, மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
Please follow and like us:

You May Also Like

More From Author