சீனாவின் லான்யுவே என்னும் சந்திர விண்கலம் ஏவுதல் மற்றும் தரையிறங்கும் சோதனை ஆகஸ்டு 6ஆம் நாள் ஹேபெய் மாநிலத்தின் ஹுவாய்லைய் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம் புவிக்கு அப்பாலுள்ள விண்ணில் உள்ள கோள்களுக்கு ஏவுதல் மற்றும் தரையிறங்கும் சோதனையை சீனா நடத்துவது இதுவே முதல் முறை. அதிகமான சோதனை நிலைமைகள், நீண்டகால சோதனை சுழற்சி, உயர் தொழில் நுட்ப சவால் ஆகியவற்றைக் கொண்ட இந்தச்சோதனை, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத்தின் முக்கிய மைல் கல் ஆகும்.
சீனாவின் லான்யுவே என்னும் சந்திர விண்கலம் ஏவுதல் மற்றும் தரையிறங்கும் சோதனை வெற்றி!
Estimated read time
0 min read
