உலக சுகாதாரா மாநாடு தைவான் தொடர்பான கருத்துருவை மறுப்பது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து

Estimated read time 0 min read

79ஆவது உலக சுகாதாரா மாநாடு தைவான் தொடர்பான கருத்துருவை மறுப்பது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 18ஆம் நாள் கருத்துத் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சீனாவின் தைவான் பிரதேசம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்வது பற்றி, சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும், தெளிவாகவும் உள்ளது. அதாவது ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்றி கையாள வேண்டும். சீனாவின் தைவான் பிரதேசம் சீன மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாத நிலையில், உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எந்த ஆதாரமும் உரிமையும் இல்லை.

ஒரே சீனா என்ற கோட்பாட்டின் முந்நிபந்தனையில், தைவான் பிரதேசம் உலக சுகாதார விவகாரத்தில் கலந்து கொள்வது பற்றி சீன மத்திய அரசு உரிய ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச சுகாதார விதியின் கட்டுக்கோப்புக்குள், தைவான் பிரதேசம், உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு நாடுகளுடனான தகவல் பரிமாற்ற அமைப்பு முறை தங்குதடையற்றதாகவும் முழுமையாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author