ஷிச்சின்பிங்-வியட்நாம் அரசுத் தலைவர் சந்திப்பு

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், 17ம் நாள் காலை, ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க ஷென்ச்சேன் நகருக்கு வந்துள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான டுலமைச் சந்தித்துரையாடினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மிக உயர் தலைவர்கள் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி வருகின்றனர். அவர்களின் தலைமையில், இரு நாட்டுறவு தொடர்ந்து புதிய கட்டத்தில் நுழைந்து, பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கமுள்ள சக்தியை ஊட்டியுள்ளது. தோழர்கள் மற்றும் சகோதரர்களான சீனாவும் வியட்நாமும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தி, பன்முக ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். 4 உலகளாவிய முன்மொழிவுகளைக் கையோடு செயல்படுத்தி, ஐ.நா, சீன-ஆசியான், லன்சான்-மேக்குங் ஒத்துழைப்பு முதலிய கட்டுக்கோப்புக்குள் ஒன்றிணைப்பை வலுப்படுத்தி, ஆசிய-பசிபிக் பொது சமூகக் கட்டுமானத்தை முன்னெடுத்து, மேலும் நியாயமான உலகளாவிய ஆளுகை முறைமையை உருவாக்குவதை இரு நாடுகளும் முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author