தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவசர கால மருத்துவ சேவைகளின் தரம் மற்றும் அதன் செயல்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்வதற்காக அவர் திடீரென இந்த மையத்திற்கு வருகை தந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வின்போது, அவசர கால அழைப்புகளை ஏற்கும் முறை, ஆம்புலன்ஸ் வாகனங்களின் இருப்பிடம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கும் வேகம் போன்ற பல்வேறு முக்கிய சேவைகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் பணிகளின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்து, அவசர கால சேவைகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்துக் சில முக்கிய ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
பொதுமக்களின் மருத்துவத் தேவைகளுக்குத் தடையின்றிச் சேவையாற்றும் 108 ஆம்புலன்ஸ் துறையின் செயல்பாடுகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்துள்ள இந்த நிகழ்வு, சுகாதாரத்துறையில் மேலும் பல அதிரடி மாற்றங்கள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசர காலப் பணிகளில் துரிதமாகச் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் முதல்வரின் இந்த விசிட் அமைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
