சீன-ரஷிய துணை தலைமை அமைச்சர்கள் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான டிங் ஷுய்சியாங், 19ஆம் நாள் பெய்ஜிங்கில் ரஷிய முதன்மை துணைத் தலைமை அமைச்சர் மன்துரோவைச் சந்தித்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில்,

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புத்தினின் நெடுநோக்கு வழிகாட்டலில், இரு நாட்டு தொடர்புடைய துறைகள் கூட்டாக முயற்சி செய்து, இரு நாட்டு முதலீட்டு ஒத்துழைப்பின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றன. சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவாகவும், சீன-ரஷிய அண்டை நாட்டு நட்புறவு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகவும் இவ்வாண்டு திகழ்கின்றது. இதை வாய்ப்பாக கொண்டு, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய பொது கருத்துகளை நடைமுறைப்படுத்தி, முக்கிய திட்டப்பணிகளை முன்னேற்றி, ஒத்துழைப்புகளை விரிவாக்கி, இரு நாட்டுறவு வளர்ச்சிக்கு மேலதிகமான உந்து சக்தியை வழங்க வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author