பொருளாதார புயல் வீசப்போகிறது- ராகுல்காந்தி எச்சரிக்கை

Estimated read time 0 min read

நாம் வாழ்நாளில் கண்டிராத பொருளாதார சூறாவளி வர இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், “பிரதமர் மோடி மாற்றிய பொருளாதார கட்டமைப்பால் வரலாறு காணாத பொருளாதார பாதிப்பு ஏற்படும். இனிவரும் காலங்கள் கடினமாக இருக்கும். அதன் தாக்கம் சாமானிய மக்களையே அதிகமாக பாதிக்கும். இந்தியா்கள் இதுவரை கண்டிராத வகையில் பொருளாதார சூறாவளி இருக்கும்.

இதனால் இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிக்குமாறு கூறும் பிரதமர் மோடி, தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுகிறார். அதானி, அம்பானிக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு நீடிக்காது” என்றார்.

You May Also Like

More From Author