சீனாவின் ட்சிங்காய் மாநிலத்தின் தொங்டே மாவட்டம், கால்நடை வளர்ப்புக்கான நவீன தொழில்நுட்ப விளக்கப் பூங்காவின் தலைமைப்பங்கினை ஆற்றி வருவதுடன், கால்நடை துறையின் விரைவான வளர்ச்சியை முன்னெடுக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை, இந்த தொழில்நுட்ப பூங்காவில் தரமான கால்நடை வளர்ப்பு கூடாரங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. மாடுகளின் இனப்பெருக்கம், வளர்ப்பு உள்ளிட்ட முழு தொழில் சங்கிலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியுடன், உள்ளூர் யாக் மாடுகளின் தொழில் வளர்ச்சியில் எண்ணிக்கை அதிகரிப்புக்குப் பதில் தரத்தின் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நவீன கால்நடை வளர்ப்பு தொழில்நுட்ப விளக்க பூங்காவில், “தொழில் பூங்கா, நிறுவனம், கூட்டுறவுச்சங்கம், ஆயவர்கள்” ஆகியோரை ஒருங்கிணைப்பது என்ற வளர்ச்சி வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழில் பூங்காவுக்கும் ஆயவர்களுக்கும் கூட்டு நலன் தரும் முறைமை, உள்ளூர் விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
யாக் மாடுகள் மற்றும் ஆடுகள், தொங்டே மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த தொழிலாக மாறியுள்ளன. 2023ஆம் ஆண்டின் இறுதி வரை, 3 லட்சத்துக்கு அதிகமான மாடுகள் மற்றும் 5லட்சத்துக்குமான ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை, கால்நடை வளர்ப்புத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு வலுவான ஆதாரங்களை வழங்குகின்றன.