10ஆம் நாள் காலை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேசப் பாசனம் மற்றும் வடிகால் கமிட்டிக் கூட்டத்தில் 2025ஆம் ஆண்டு உலகப் பாசனக் கட்டமைப்புகளின் மரபுச் செல்வப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிப்பட்டது.
இப்பட்டியலில் சீனாவின் யுன்னான் மாநிலத்தில் உள்ள ஹானி படிமுறை வயல், ஜியாங் சு மாநிலத்தின் ட்சிஷேன் ஏரி பாசனக் கட்டமைப்பு, சிச்சுவான் மாநிலத்தின் ஜியன்ஜியாங்யேன் எனும் பாசனக் கட்டமைப்பு, தலைநகர் பெய்ஜிங்கின் மென்டோகௌ மாவட்டத்திலுள்ள யொங்டிங் ஆற்று பழைய பாசனக் கட்டமைப்பு ஆகிய 4 பாசனக் கட்டமைப்புகள் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து உலக பாசனக் கட்டமைப்புகளின் மரபு செல்வப் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த கட்டமைப்புகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.