ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வெள்ளிக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய வினேஷ் போகட், தனது பயணத்தில் நாடு தனக்கு ஆதரவளித்துள்ளது என்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
காங்கிரஸில் இணைந்தது குறித்து வினேஷ் போகட் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது, பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் இருந்தன.
பெண்களுடன் நிற்கும் ஒரு கட்சியில் நான் இணைந்ததில் பெருமைப்படுகிறேன், சதக் முதல் சன்சாத் வரை போராடத் தயாராக இருக்கிறேன்.” என்றார்.