சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் சாவ்லேஜி, அழைப்பிற்கிணங்க, ஜூலை 24ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை, ஹங்கேரியில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது அவர் அந்நாட்டின் அரசுத் தலைவர் மற்றும் தலைமையமைச்சரைச் சந்தித்துரையாடினார்.
இப்பயணத்தின் போது அவர் கூறுகையில், சீனா, ஹங்கேரியுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவையும் அடிப்படையில் அந்நாடின் கிழக்கு நோக்கிய வளர்ச்சி என்ற நெடுநோக்குத் திட்டத்துடன் ஆழமாக ஒன்றிணைத்து, உயர்தர வழிமுறையில் ஹங்கேரி- செர்பிய இருப்புப் பாதை திட்டப்பணியை நிறைவேற்றி, இரு நாட்டு மக்களின் தொடர்பை வலுப்படுத்த விரும்புகிறது என்றார்.