சீனாவில் அமோக கோடைக்கால தானிய விளைச்சல் அமோகம்
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜுலை 17ம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாண்டின் முற்பாதியில் வேளாண்துறை மற்றும் கிராமப்புறப் பொருளாதார இயக்க நிலைமையை அறிமுகப்படுத்தியது.
இவ்வாண்டில் தானிய உற்பத்தியின் அடிப்படை சீராக உள்ளது. குறிப்பிட சில இடங்களில் ஏற்பட்ட வறட்சி பாதிப்பு சமாளிக்கப்பட்ட பின், கோடைக்கால தானிய அமோக அறுவடை நனவாக்கப்பட்டது. இது, முழு ஆண்டின் தானிய உற்பத்திக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கியது.
தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் தரவுகளின்படி, நாட்டின் கோடைக்கால தானிய விளைச்சல், 14 ஆயிரத்து 974 கோடி கிலோவைத் தாண்டி, கடந்த ஆண்டின் விளைச்சலுக்கு அடுத்து, வரலாற்றில் இரண்டாவது உயர் விளைச்சல் பதிவாகும் என்று தொடர்புடைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.