“ராஜ்மோகனை தேர்வு செய்தது சரிதான்”- ஐஸ்வர்யா ராஜேஷ்

Estimated read time 1 min read

விருதுநகரில் பிரபல நகைக்கடையை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடசென்னை திரைப்படம் குறித்து 2 அப்டேட் உள்ளதா என்ற கேள்விக்கு?, வெற்றிமாறன் சாரிடம்தான் கேட்க வேண்டும், கண்டிப்பாக எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார், நானும் உங்களைப் போலவே காத்திருக்கிறேன்.

திரைத்துறைக்கு அமைச்சராக ராஜ்மோகன் அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ? அவர்கள் முடிவெடுக்கிறார்கள். அந்த முடிவில் நாம் எதுவும் சொல்ல முடியாது. சரியான முடிவுதான் அவர்கள் எடுப்பார்கள். காரணமின்றி யாருக்கும் பதவி கொடுக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு காரணம் இருப்பதால்தான் கொடுத்திருப்பார்கள். நானும் உங்களைப் போலவே இந்த ஐந்தாண்டுகள் எப்படி இருக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்(I AM Egrly Waiting) என்்ார். வடசென்னை தாண்டி வேறு ஏதும் அப்டேட் இருக்கிறதா என்ற கேள்விக்கு?. அண்டர் 18 என்ற படத்திற்கு 29-ஆம் தேதி பூஜை நடத்துகிறோம். வெற்றிமாரன் சாரின் உதவி இயக்குனர் இந்தப் படம் இயக்குகிறார். இது மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். தமிழ் சினிமாவில் தொடர்ந்து அழுத்தமான கதைகளில் நடிக்கும் காரணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு?. ஏன் வேண்டாமா? அந்த மாதிரி கதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன, அதனால் செய்கிறேன். அது மட்டுமே அல்ல, எல்லா வகையான படங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கதை தேர்ந்தெடுப்பது என்னுடைய மிக முக்கியமான முடிவாக இருக்கும். கடைசியாக ஒரு தெலுங்கு படத்தில் மிகவும் கமர்சியல் கதாபாத்திரத்தில் நடித்தேன். அது பெரிய வெற்றி படமானது. கண்டிப்பாக தமிழிலும் ஒரு கமர்சியல் படம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு திரைத்துறைகளுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு? இன்றைக்கு சினிமா என்பது இந்திய சினிமாவாக மாறிவிட்டது, அவ்வளவுதான். வடசென்னையை பார்க்காத மக்கள் எந்த மொழியிலும் இருக்க மாட்டார்கள். அதேபோல் புஷ்பா, காந்தாரா, துரந்தரா என்று எல்லாமே மொழி சார்ந்தது கிடையாது, சினிமா சார்ந்தது மட்டுமே. பான் இந்தியா சினிமா என்பது அவ்வளவுதான். நல்ல படமாக இருந்தால் மக்கள் எந்த மொழியாக இருந்தாலும் திரையரங்கிற்கு வந்து பார்ப்பார்கள். ஓடிடி தளங்களால் திரையரங்குகளுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது என்பது சிறிய வருத்தம் தான். நல்ல படம் என்றால் கண்டிப்பாக மக்கள் திரையரங்கில் வந்து ஆதரவு கொடுப்பார்கள் என்பது பல படங்களால் நிரூபணமாகியிருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்

Please follow and like us:

You May Also Like

More From Author