மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்தில் பொதுவெளியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளார்.
அண்மையில் கண்ணீர் மல்க உணர்ச்சிப்பூர்வமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தற்போது ஆன்மீகப் பாதையில் கவனம் செலுத்தி வருவது திரைத்துறையினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய பிரஸ் மீட்டில் பேசிய நடிகர் ரவி மோகன், தனது விவாகரத்து வழக்கு சட்டப்பூர்வமாக முடிவுக்கு வரும் வரை திரைப்படங்களில் நடிப்பதே இல்லை என்றும், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் எடுக்கும் குடும்பச் சண்டை; திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்த பிரபல நடிகர்
