பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்  

கோலிவுட்டின் பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 46.
சமூக வலைத்தளத்தில் பிராங்க் வீடியோ மூலம் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ்.
அதன் பின்னர் விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.
அதன் தொடர்ச்சியாக ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த பிஜிலி, தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.
அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததால் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிஜிலி ரமேஷ் நேற்று இரவு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author