“ஏழைகளின் கடன்கள் தள்ளுபடியாகிறதா?” – வறுமை ஒழிப்புத் துறையை கையில் எடுத்த CM விஜய்…. தவெக அமைச்சரவையின் டாப் ஆக்ஷன்….!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் இன்று நடைபெற்ற அதிரடி அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் தனக்கான துறைகளில் கூடுதலாக மிக முக்கியமான மக்கள் நலத் துறைகளை இணைத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே பவர்ஃபுல் துறைகளைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர், தற்போது கூடுதலாக ‘வறுமை ஒழிப்புத் துறை’ மற்றும் ‘கிராமப்புற கடன் சுமை ஒழிப்புத் துறை’ ஆகிய இரண்டையும் தன் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இந்த முக்கிய துறைகளை முதல்வர் கையில் எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் கடன் சுமையைக் குறைக்கவும், வறுமையை முற்றிலும் ஒழிக்கவும் தேர்தல் களத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்களிடம் ஒப்படைக்காமல், நேரடியாக முதலமைச்சரே இந்த இரண்டு துறைகளையும் கண்காணிப்பது, திட்டங்களை வேகமாகவும் எவ்வித முறைகேடும் இல்லாமலும் மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் எனப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த ‘மாஸ் மூவ்’ ஒட்டுமொத்த தமிழக கிராமப்புற மக்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author