‘எவன் இருந்தால் என்ன? போனால் என்ன? கவலை இல்லை’: ஆர்.எஸ் பாரதி பேட்டி..!

Estimated read time 0 min read

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “விஜய் பதவியேற்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதை நாங்கள் சுட்டி காட்டியபோது திருத்திக் கொள்கிறோம் என்று அமைச்சர் ஒருகூர் கூறினார். ஆனால் மீண்டும் மீண்டும் அதே செயல்கள் தொடர்கின்றன.

கல்வி, மருத்துவம், பொருளதாரத்தில் எங்கள் ஆட்சியில் தமிழகம் நம்பர் 1 இடத்தில் இருந்தது. அடுத்த 5 வருடங்கள் தமிழகம் இன்னும் கீழே போகும் என்கிற அச்சம் உள்ளது. எங்கள் தலைவர் மிகவும் கஷ்டப்பட்டு பொருளதாரத்தில் டபுள் டிஜிட்டில் வந்துவிட்டார். எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதோ, பொருளாதாரமும் பின்னடைவை சந்திக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற எளிமையான விழாவில், விசிக திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு மற்றும் ஐயுஎம்எல் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். ஷாஜகான் ஆகிய இருவருக்கும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதிலளித்த திமுகவின் ஆர்.எஸ் பாரதி; ”நாங்கள் இடம்பெறாத அமைச்சரவையில் யார் இடம்பெற்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. எவன் இருந்தாலும் போனாலும் அதைப் பற்றி கவலை அக்கறை எங்களுக்கு இல்லை” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author