சீன-மொசாம்பிக் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. மொசாம்பிக் அரசுத் தலைவர் டேனியல் பிரான்சிஸ்கோ சாப்போ அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த போது கூறுகையில், உயர்நிலையிலுள்ள இரு நாட்டுறவு தொடர்ச்சியாக வலுப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்து வருகிறது.
அடிப்படை வசதிக் கட்டுமானம் மற்றும் வேளாண்மையில் இரு தரப்பும் உயர்தர ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும், உயிரின வேளாண்மை துறையில், மொசாம்பிக் செழுமையான மூலவளங்களை கொண்டுள்ளது. வேளாண்மை பற்றிய சீனாவின் தொழில் நுட்பங்கள் உலகத்தின் முன்னணியில் உள்ளன.
சீனாவின் தொழில் நுட்பங்களின் மூலம், உலகத்துக்குத் தேவையான மேலதிக பயிர்கள் மொசாம்பிகில் வளர்க்கப்படும். இரு நாடுகளின் தானிய பாதுகாப்புக்கு இது துணைப் புரியும். அத்துடன், இத்தகைய ஒத்துழைப்புகளின் மூலம், இரு நாட்டுறவு ஆழமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சீன-ஆப்பிரிக்க பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம் பற்றி சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பலமுறை கூறினார். இது குறித்து டேனியல் சாப்போ கூறுகையில், ஆப்பிரிக்கா பற்றி சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த கொள்கைகள், எதிர்காலத்தில் ஆப்பிரிக்காவின் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். அவரது வழிக்காட்டலுடன், வேளாண்மை, தொழிற்துறை, சுற்றுலா, அகழ்ந்தெடுப்பு, எரியாற்றல், அடிப்படை கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்பட்டு, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.