ஏபெக் வர்த்தக அமைச்சர்களின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மே 22ஆம் நாள் முற்பகல் சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் சூசோ நகரில் துவங்கியது. ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகப் பொருளாதார மற்றும் வர்த்தக கொள்கையின் காற்றுத் திசைக்காட்டியாக, நடப்புக் கூட்டத்தில், ஆசிய-பசிபிக் தாராள வர்த்தக மண்டலத்தின் கட்டுமானம், பலதரப்பு வர்த்தக அமைப்புமுறை பேணிக்காப்பு, எண்ணியல் ஒத்துழைப்பு, பசுமையான பொருளாதாரம் ஆகிய 4 முக்கிய துறைகள் குறித்து விவாதிக்கப்படும்.
2025ஆம் ஆண்டு, ஏபெக் அமைப்பைச் சேர்ந்த 13 உறுப்புப் பிரதேசங்களின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா விளங்கியது. சீனாவுக்கும் ஏபெக் பொருளாதாரங்களுக்கும் இடையிலான மொத்த வர்த்தக மதிப்பு 3.7 இலட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டி, சீனாவின் அன்னிய வர்த்தக மதிப்பில் 57.8 விழுக்காட்டை வகித்தது.
மேலும், ஏபெக் அமைப்பைச் சேர்ந்த 15 உறுப்புப் பிரதேசங்கள் உள்ளிட்ட 31 உலக நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் 24 தாராள வர்த்தக மண்டல உடன்படிக்கைகள் அல்லது பொருளாதார மற்றும் வர்த்தக ஆவணங்களில் சீனா கையொப்பமிட்டுள்ளது.
