கருத்துக் கணிப்பு: ஜப்பான் மற்றும் அமெரிக்க இராணுவ உறவை வலுப்படுத்துவது மீது ஆழ்ந்த கவலை

சமீபத்தில், டோக்கியோவில் நடைபெற்ற பாதுகாப்புக் கலந்தாய்வுக்குப் பிறகு, ஜப்பானும் அமெரிக்காவும் செய்தி அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டன. ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் தங்களது ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகள் ஒப்புக்கொண்டன. இதுவே, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சி.ஜி.டி.என். தொலைக்காட்சி நிறுவனம் இணையவழியாக நடத்திய கருத்து கணிப்பின்படி, ஜப்பானும் அமெரிக்காவும் ஒன்றுடன் ஒன்று பிரத்தியேகக் குழுவை உருவாக்குவது என்ற செயல், பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத் தன்மையைச் சீர்குலைக்கும் ஒரு புதிய அச்சுறுத்தலாகும். இது குறித்து, சர்வதேச சமூகம் ஆழ்ந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று 81.69 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.


மேலும், ஜப்பான் தனது அமைதி அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து விலகி, ஆபத்தான பாதையில் நடந்து வருவதாக, கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 90.33 விழுக்காட்டினர் தெரிவித்தனர். பகுத்தறிவற்ற முறையில் பாதுகாப்புச் செலவுகளின விரிவாக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகவும், அளவுக்கு மீறிய பாதுகாப்புச் செலவுகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளதாகவும் 87.46 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author