சீன-பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 14ஆம் நாள், அழைப்பின் பேரில், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பாரொதுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

வாங்யீ கூறுகையில்,

இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலின் கீழ், இரு தரப்புறவு நிதானமான, சீரான வளர்ச்சி முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்தி வருகிறது. தற்போதைய சர்வதேச நிலைமை சிக்கலான நிலையில் மாறி வருகிறது. சீனாவும் பிரான்ஸும் ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர அங்க நாடுகளாக விளங்குகிறன. இவ்விரு நாடுகள் நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, அபாயத்தையும் அறைகூவல்களையும் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒரே சீனா எனும் கோட்பாடு, சீன-பிரான்ஸ் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கான அரசியல் அடிப்படையாகும். நடைமுறையாக்க நடவடிக்கைகளின் மூலம் பிரான்ஸ் இக்கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். சீனாவின் தைவான் மாநிலத்துடன் எந்த வடிவங்களிலும் அதிகாரப்பூர்வமான தொடர்புகளை பிரான்ஸ் மேற்கொள்ள வேண்டாம் என்றும் வாங்யீ தெரிவித்தார்.

பாரொத் கூறுகையில்,

ஒரே சீனா எனும் கோட்பாட்டில் பிரான்ஸ் எப்போதும் ஊன்றி நின்று வருகிறது. தற்போது, ஐரோப்பிய-சீன பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, இன்னல்களையும் அறைகூவல்களையும் எதிர்நோக்குகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவுக்குமிடையில் ஆக்கப்பூர்வமானப் பரிமாற்றத்தின் மூலம் தீர்வுகளைத் தேடுவதை முன்னெடுக்க பிரான்ஸ் விரும்புவதாக கூறினார்.

ஈரான் நிலைமை, உக்ரேன் நெருக்கடி உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்

You May Also Like

More From Author