குவெய்த் மற்றும் பஹ்ரேன் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மார்ச் 9ம் நாள் குவெய்த் வெளியுறவு அமைச்சர் ஜெராஹ், பஹ்ரேன் வெளியுறவு அமைச்சர் சயானி ஆகியோருடன் தனித்தனியாக தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

ஜெராஹ் கூறுகையில், போரில் பங்கேற்காத குவெய்த் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்க்க குவெய்த் பாடுபட்டு வருகிறது. இருந்தாலும் சட்டப்பூர்வமான தற்காப்பு உரிமைகளை குவெய்த் கைவிடாது என்று தெரிவித்தார். இது குறித்து வாங்யீ கூறுகையில், அரசியல் மற்றும் தூதாண்மை வழிமுறைகள் மூலம் சர்ச்சையைத் தீர்ப்பதை சீனா ஆதரித்து வருகிறது. மத்திய கிழக்கு பிரச்சினைக்கான சீனச் சிறப்பு தூதர் இணக்க முயற்சிக்காக இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குச் சென்றுள்ளார் என்று கூறினார்.

சயானி, பிராந்திய நிலைமை மற்றும் பஹ்ரேனின் நிலைப்பாட்டை அறிமுகம் செய்தார். அமைதியை நேசித்து வரும் பஹ்ரேன், சட்டவிரோதமான தாக்குதலால் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் தெரிவித்தார். இது குறித்து வாங்யீ கூறுகையில், இந்த நிலைமையில் சீனா கவனம் செலுத்தி வருகிறது. அப்பாவி மக்கள் மற்றும் இராணுவமற்ற இலக்குகள் மீதான அனைத்து தாக்குதலும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author